The Elementary Principles of CHRIST
The New Life
Backஅப்போஸ்தலர்களிடமிருந்த அதே விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும், ஏனெனில் இத்தகைய நம்பிக்கையும் விசுவாசங்களும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து வந்தது. இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் அவர்கள் தம் கர்த்தராக விசுவாசித்தனர். கிறிஸ்துவுடனே கூட மரித்து அவருடனே கூட புதிய வாழ்க்கைக்கு வந்ததாக அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். இயேசு கிறிஸ்துவுக்குள் தான் ஞானஸ்நானம் பெற்றதாக விசுவாசத்தின் மூலமாக அவனொரு கர்த்தரின் கருவியாகினான் (கலாத்தியர் 3:27). கர்த்தருடைய நற்செய்தியில் இயேசு பெற்ற ஞானஸ்நானம் காணப்படுகிறது, அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் இருக்கிறது, இந்த உண்மை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் ஒவ்வொருவரின் மீதும் அவர் பொழிந்த பரிசுத்த ஆவியானவரின் வரமும் காணப்படுகிறது. இந்த சரியான நற்செய்தியை அறிந்து நீங்கள் விசுவாசிக்கிறீகளா? அப்போஸ்தலர்கள் விசுவாசித்த நற்செய்தியும் இதுவேயாகும். ஆகவே, நாமும் கூட, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்க வேண்டும்.
Comments
Post a Comment