WISDOM OF THE PRIMITIVE GOSPEL
The New Life
Backநன்மைத் தீமை அறியத்தக்க மரத்தின் கனியை புசித்த மனிதகுலம், கர்த்தருடைய நன்மையைத் தீமையைக் குறித்த அளவுகோலில் இருந்து வேறுபட்ட ஒரு அளவுகோலை பெற்றுக் கொண்டனர். அப்படியானால் எது சரியானது, கர்த்தருடைய வார்த்தையா அல்லது நம்முடைய நியாயமா? நம்முடைய தரம் எப்போதும் ஒத்து பார்ப்பதாகவும் சுயநலமிக்கதாகவும் இருக்கிறது. ஆகவே நாம் நம்முடைய சொந்த கருத்துக்களை விட்டு விட்டு கர்த்தருடைய வார்த்தையை பின்பற்ற வேண்டும் மேலும் கீழ்வருமாறு ஒருமுகப் படுத்த வேண்டும், “கர்த்தருடைய வார்த்தை என்ன கூறுகிறது?” கர்த்தருடைய வார்த்தையை அலட்சியம் செய்து சுய-நீதியைத் தேடுவது காயீனின் விசுவாசமாகவும் மத நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆபேல் தன் தந்தையான, ஆதாமிடமிருந்து கேட்ட, கர்த்தருடைய வார்த்தையில் தன் விசுவாசத்தை வைத்து, தன் மந்தையின் முதல்பிறப்பையும் அதன் கொழுப்பையும் காணிக்கையாக்கினான். ஆனால் சுயநலமிக்க காயீன் நிலத்தின் கனியை தேவனிடம் எடுத்து வந்தான். கர்த்தர் ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார் காயீனின் காணிக்கையை அவர் நிராகரித்தார். மனிதர்களினால் உருவாக்கப் பட்ட மதங்களில் வைக்கப்படும் நம்பிக்கையால் இரட்சிப்பை எடுத்து வர முடியாது என்பது கர்த்தரின் போதனையாகும்..
Comments
Post a Comment