The Relationship Between The Ministry of JESUS and That of JOHN the BAPTIST
The New Life
Backயோவான் ஸ்நானனுடைய ஊழியம் அவசியமான ஒன்று அல்லது அது தேவையில்லாத ஒன்று என்பது பொருட்டேயல்ல என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? எழுதப்பட்டுள்ள கர்த்தருடைய வார்த்தையின் படியாக நீங்கள் விசுவாசிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் என்பதின் அடிப்படையிலே யோவான் ஸ்நானனுடைய ஊழியத்தை புரிந்து கொண்டு அதனை விசுவாசிக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் உள்ள யோவான் ஸ்நானன், மல்கியா புத்தகத்தின் அதிகாரம் 4, வசனங்கள் 4-5 இன் படியாக பூமிக்கு அனுப்பி வைக்கப் போவதாக வாக்குத்தத்தம் செய்யப் பட்ட எலியா தீர்க்கதரிசியாவான். வரப்போகிற எலியா தீர்க்கதரிசியாகிய, யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக பிறந்தான், அவன் முப்பது வயதிலே யோர்தான் நதியில் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த போது உலகத்தின் எல்லாப் பாவங்களையும் அவர் மீது சுமத்தியவனாவான். இப்படியாக, யோவான் ஸ்நானனுட்டைய ஊழியத்தை அறிந்து இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment