Schedule for Bible reading
தினமும் பைபிள் வாசிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவருடைய வார்த்தையின் வாயிலாக யெகோவாவுக்குச் செவிகொடுப்பதன் மூலம் அவருடன் நீங்கள் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழலாம். அவருடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (நீதிமொழிகள் 2:1-5) பரலோகத் தகப்பனிடமிருந்து வரும் இந்த ஒப்பற்ற சத்தியங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” என சங்கீதக்காரன் கேட்டார். “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) ஆகவே பைபிளை வாசிக்கும் பழக்கத்தை இப்போதே துவங்குங்கள், அதைத் தவறாமல் பின்பற்றுங்கள். நீங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அதிக சுவாரஸ்யமாக இருப்பதைக் காண்பீர்கள்!
Comments
Post a Comment