Paul C. Jong’s Spiritual Growth Series 5 Mathew
The New Life
Backநாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
Comments
Post a Comment