Eat My Flesh And Drink My Blood
The New Life
Backஇதுவரை, அநேக கிறிஸ்தவர்கள் மதங்களின் செய்கைகளைத் தான் பரம்பரை பரம்பரையாக அறிந்திருக்கிறார்களே தவிர, சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை. பரிசுத்த நற்கருணை என்ற நற்செய்தியிலிருந்து, இன்றைய கிறிஸ்தவம் தன்னுடைய முறைமைகளைப் பின்பற்றுகிறது, ஆனால் அது சத்தியத்தைக் குறித்த அறிவில்லை, மாறாக அது பரிசுத்தமாக்கப் பட்ட சில சடங்காச்சார்யங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. இதன் விளைவாக, நற்கருணையின் போது இயேசுவின் மாமிசத்தையும் அவருடைய இரத்தத்தையும் குறிக்கும் ரொட்டியையும் ரசத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் பெற்றுக் கொள்ளும் போது, அவர் சிந்திய இரத்தத்த காணிக்கையை மட்டும் தான் அவர்கள் நன்றியுடன் எண்ணிப் பார்க்கிறார்களே தவிர, இயேசு ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது அவர் அவர்களின் எல்லாப் பாவங்களையும் தன் சரீரத்தின் மீது ஏற்றுக் கொண்டதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் படியாக இயேசுவின் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் என்ன பொருள் இருக்கிறது என்பதை உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இப்போதாவது அறிந்து கொண்டு, அதனை விசுவாசித்து, இதன் மூலமாக அவர்கள் தம்முடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டு சரியான விசுவாசத்துடன் பரிசுத்த நற்கருணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.
Comments
Post a Comment