An Overview of the Bible


Jehovah Witness

Back

பைபிள் ஒரு கண்ணோட்டம்


Jehovah Witness

பைபிளை என்றாவது வாசித்திருக்கிறீர்களா? இது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு படைப்பு. இதுவரை வேறெந்த புத்தகமும் இதைப்போல் பரவலாக வினியோகிக்கப்படவில்லை. பைபிளின் செய்தி ஆறுதல் தருகிறது, நம்பிக்கை ஊட்டுகிறது, வாழ்க்கைக்கு அருமையான ஆலோசனை அளிக்கிறது—இதை எல்லா கலாச்சாரத்தினரும் ஆமோதிக்கிறார்கள். ஆனால், இன்று அநேகர் பைபிளைப் பற்றி ஓரளவுதான் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் மத நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படலாம். உங்களுக்காகவே பைபிளிலுள்ள விஷயங்களை இந்தச் சிற்றேடு சுருக்கமாகத் தொகுத்து வழங்குகிறது.


பைபிள் கால வரலாறு

  1. “தொடக்கத்தில் . . .”

  2. கி.மு. 4026 (சுமார் 6,000 ஆண்டுகளுக்குமுன்) ஆதாம் படைக்கப்பட்டான்

  3.  கி.மு. 3096 (சுமார் 5,100 ஆண்டுகளுக்குமுன்) ஆதாமின் மரணம்

  4.  கி.மு. 2370 (சுமார் 4,370 ஆண்டுகளுக்குமுன்) ஜலப்பிரளயம்

  5.  கி.மு. 2018 ஆபிரகாம் பிறந்தது

  6. கி.மு. 1943 (சுமார் 3,950 ஆண்டுகளுக்குமுன்) ஆபிரகாமுடன் ஒப்பந்தம்

  7.  கி.மு. 1750 (சுமார் 3,750 ஆண்டுகளுக்குமுன்) யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார்

  8.  கி.மு. 1613-க்கு முன் (சுமார் 3,620 ஆண்டுகளுக்குமுன்) யோபுவுக்குச் சோதனை

  9. கி.மு. 1513 (சுமார் 3,520 ஆண்டுகளுக்குமுன்) எகிப்திலிருந்து புறப்படுதல்

  10.  கி.மு. 1473 யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர் கானானுக்குள் நுழைகிறார்கள்

  11. கி.மு. 1467 (சுமார் 3,470 ஆண்டுகளுக்குமுன்) கானான்மீது அமோக வெற்றி

  12.  கி.மு. 1117 (சுமார் 3,120 ஆண்டுகளுக்குமுன்) சவுல் ராஜாவாகிறார்

  13.  கி.மு. 1070 தாவீதுடன் கடவுள் ராஜ்ய ஒப்பந்தம் செய்கிறார்

  14. கி.மு. 1037 சாலொமோன் ராஜாவாகிறார்

  15. கி.மு. 1027 (சுமார் 3,030 ஆண்டுகளுக்குமுன்) எருசலேம் கோயில் கட்டிமுடிக்கப்படுகிறது

  16. சுமார் கி.மு. 1020 உன்னதப்பாட்டு பூர்த்தியாகிறது

  17.  கி.மு. 997 (சுமார் 3,000 ஆண்டுகளுக்குமுன்) இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிளவுறுகிறது

  18.  சுமார் கி.மு. 717 (சுமார் 2,720 ஆண்டுகளுக்குமுன்) நீதிமொழிகள் தொகுப்பு முடிவடைகிறது

  19.  கி.மு. 607 (சுமார் 2,610 ஆண்டுகளுக்குமுன்) எருசலேமின் அழிவு; சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்படுதல்

  20.  கி.மு. 539 கோரேசுவிடம் பாபிலோன் வீழ்ச்சியடைகிறது

  21. கி.மு. 537 (சுமார் 2,540 ஆண்டுகளுக்குமுன்) யூதர்கள் தாயகம் திரும்புகின்றனர்

  22. கி.மு. 455 எருசலேமின் மதிற்சுவர்கள் மீண்டும் கட்டப்படுகிறது; 69 “வாரங்கள்” ஆரம்பம்

  23. கி.மு. 443-க்குப்பின் மல்கியா புத்தகம் முடிவடைகிறது

  24.  சுமார் கி.மு. 2-ல் இயேசு பிறக்கிறார்

  25. கி.பி. 29 (சுமார் 1,980 ஆண்டுகளுக்குமுன்) இயேசு ஞானஸ்நானம் பெறுகிறார்  கி.பி. 29-ல் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றி இயேசு அறிவிக்க ஆரம்பிக்கிறார்

  26. கி.பி. 31 12 அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்; மலைப் பிரசங்கம்

  27.  கி.பி. 32 லாசருவை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்

  28. கி.பி. நிசான் 14 (சுமார் 1,970 ஆண்டுகளுக்குமுன்) இயேசு கழுவேற்றப்படுகிறார் (நிசான்—மார்ச்-ஏப்ரல்)

  29. நிசான் 16, கி.பி. 33 இயேசு உயிர்த்தெழுப்பப்படுகிறார்

  30.  சிவான் 6, கி.பி. 33 பெந்தெகொஸ்தே; கடவுளுடைய சக்தி அருளப்பட்டது (சிவான்—மே-ஜூன்)

  31. கி.பி. 36 (சுமார் 1,970 ஆண்டுகளுக்குமுன்) கொர்நேலியு கிறிஸ்தவராகிறார்

  32.  சுமார் கி.பி. 47-48 பவுலின் 1-ஆம் பிரசங்க பயணம்

  33. சுமார் கி.பி. 49-52 பவுலின் 2-ஆம் பிரசங்க பயணம்

  34. சுமார் கி.பி. 52-56 பவுலின் 3-ஆம் பிரசங்க பயணம்

  35.  கி.பி. 60-61 ரோமில் கைதியாக இருக்கும் பவுல் கடிதங்கள் எழுதுகிறார்

  36.  கி.பி. 62-க்கு முன் இயேசுவின் சகோதரர் யாக்கோபு கடிதம் எழுதுகிறார்

  37.  கி.பி. 66 ரோமுக்கு எதிராக யூதரின் கிளர்ச்சி

  38. கி.பி. 70 (சுமார் 1,930 ஆண்டுகளுக்குமுன்) எருசலேமும் கோயிலும் ரோமரால் அழிக்கப்படுதல்

  39.  கி.பி. 96 (சுமார் 1,910 ஆண்டுகளுக்குமுன்) வெளிப்படுத்துதலை யோவான் எழுதுகிறார்

  40. சுமார் கி.பி. 100 கடைசி அப்போஸ்தலன் யோவானின் மரணம்

Comments

Popular posts from this blog

Give a thorough witness about God's Kingdom

FOR THE LOST SHEEP 1

Ephesians